திருமணத்தை அறிவித்த அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா! வைரலாகும் காதலர் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் மதுமிதா. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் மதுமிதா அவரது காதலர் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது தனது திருமண திகதியையும் காதல் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். குறித்து பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சீரியல் நடிகை மதுமிதா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது முதல் சீனன் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது எதிர் நீச்சல் 2 ஆம் பாகமும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.

முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது சீசனில் நடிக்கவில்லை.அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சன் தொலைக்காட்சியை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது மதுமிதா அவரது காதலர் உடன் 30.9.2026 அன்று திருமணம் நடக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாலாஜி திருமால் என்பவரை அவர் காதலித்துவருவதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண திகதியையும் தனது ரசிகர்களுடன் மதுமிதா பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |