அக்டோபரில் கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு சோதனைகள் காத்திருக்கு ஜாக்கிரதை!
பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமையும். இதற்கு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் முக்கிய காரணமாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நாம் நுழையவுள்ளோம்.இந்த மாதம் எப்படி இருக்கும், குறிப்பாக எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்? எந்த ராசிகளுக்கு சவாலானதாக அமையும் என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!
அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.அதேபோல், சூரியன் துலாம் ராசிக்கும், தேவர்களின் குருவான குரு பகவான் சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளனர்.
குறித்த பெயர்ச்சிகளால் சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் பெருமளவில் சவால்களையும், பிரச்சினைகளையும் சற்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
தேவையற்ற செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக இந்த மாதம் சற்று மந்தமான சூழல் நிலவக்கூடும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
எதிர்பாராத இடமாற்றத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்காவிட்டால், நிதி நெருக்கடியால் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கலாம். சிறிய வேலைகளைக்கூட முடிப்பதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ராகு மற்றும் கேதுவின் தாக்கத்தால், மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் தடைகளை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் மனக்கசப்புகள் ஏற்படலாம். நிதி ரீதியாகவும் இந்த மாதம் சாதகமாக இருக்காது. விபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால், வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். இருப்பினும், இந்த மாதத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையும் தைரியமும் சற்று குறைவாக உணரக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். மேலும், கவனச்சிதறல்கள் காரணமாக வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படலாம். தொழில் ரீதியாக இந்த மாதத்தில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
நிதி விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக, வியாபாரத்தில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. இல்லையெனில் எதிர்பாராத வகையில் பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டி ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |