தங்க விலையில் அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.1,880 குறைவு!
இன்றைய (செப்டம்பர் 28) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.

இதனால் தங்கம் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் விலை நிலவரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,765 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,10,120 ஆகவும் குறைந்துள்ளது.இதன்மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.10 லட்சத்திற்கும் கீழ் சரிவை நெருங்கியுள்ளது.
18 காரட் தங்கம் இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.235 குறைந்து, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,535-க்கும், ஒரு சவரன் ரூ.92,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245 ஆக உள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |