மகன்களின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நயன் - விக்கி : படுவைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை நயன்தாரா மற்றும் விக்கி தம்பதியினர் தங்களின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் 4வது பிறந்தநாளை மகன்களுக்கு பிடித்த ஸ்டைலில் பிரம்மாண்டமாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.
தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.

திருமணத்தின் பின்னம் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘டாக்சிக்’ மற்றும் ‘ஹாய்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
குறிப்பாக, ‘டாக்சிக்’ எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய நிலையில், ‘ஹாய்’ படமும் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களும் பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கே எப்போதும் முதலிடம் அளித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்கி தம்பதியினர் தங்களின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் 4வது பிறந்தநாளை மகன்களுக்கு பிடித்த ஸ்டைலில் பிரம்மாண்டமாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |