இவ்வளவு பெரிய பசங்களா? நடிகை லைலா குடும்பத்தை பாருங்க
நடிகை லைலாவின் குடும்பத்தை புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
லைலா
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா.
இவர், இந்தியில் நடிகையாக அறிமுகமாகி, அதன்பின்னர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கள்ளழகர்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த லைலா சிரிப்புக்கும் கியூட்டான பாவனைக்கும் பெயர் போனவர்.
கடந்த 2006 - ம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் செட்டிலானார்.
இவ்வளவு பெரிய பசங்களா?
இந்த நிலையில், கடந்த 2022ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக விஜய் மற்றும் பிரபல நடிகர்கள் இணைந்து நடித்த goat திரைப்படத்தில் பிரசாந்த்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் லைலா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மகன்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'My handsome boys 😍” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “இவ்வளவு பெரிய பசங்களா ஏங்க சொல்லவே இல்ல..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |