நியூ ஹேர் ஸ்டைலில் டாம் பாய் லுக் கொடுத்த குஷ்பு… புகைப்படத்தை பார்த்து அசந்து போன நெட்டிசன்கள்!
நியூ ஹேர் ஸ்டைலில் டாம் பாய் லுக் கொடுக்கும் நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை குஷ்பு.
இவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குநர் சுந்தர் சி-யை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். பின்னர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு, அரசியலில் கால் பதித்து விட்டார்.
அந்த வகையில் பாஜகவில்“ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக ” பணியாற்றி வருகிறார்.
டாம் பாய் லுக்
இவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் பல சர்ச்சையான கருத்துக்கள் வரும் ஆனால் இவற்றிற்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்து கொண்டு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, டாம் பாய் லுக் கொடுக்கும் வகையில் தலைமுடியை வெட்டி , நியூ ஹேர் ஸ்டைல் செய்துள்ளார்.
இதில் பார்க்கும் போது நம்ம குஷ்புவா இது? என ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. மகள்கள் இருவரும் லண்டனில் படித்து வருவதால் குஷ்பு அடிக்கடி சென்று வந்தார்.
தற்போது இவரின் , நியூ ஹேர் ஸ்டைலை பார்க்கும் போது லண்டன் பெண்ணாக மாறி விட்டார் போல் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |