குஷ்புவின் கரு கரு கூந்தல் சீக்ரெட்! துளியும் கலப்படம் இல்லை.... இந்த 3 இயற்கை பொருள் போதும்!
தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் குஷ்பு. இந்தியாவிலேயே நடிகை ஒருவருக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தவர் குஷ்பு.
இவரது க்யூட்டான சிரிப்பை போல் இவரது அடர்த்தியான கூந்தலுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு.
அரசியல், சினிமா என பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவான இவர், தொடர்ந்து தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி இன்று தனது ஹேர்பேக் ரகசியத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார். அதில் அவர், உங்கள் கூந்தல் இவ்வளவு அடர்த்தியாக இருக்க என்ன காரணம் என பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
அதற்கு காரணம் வீட்டில் தயாரிக்கும் ஹேர்பேக் தான். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊரவைத்து, அடுத்த நாள் அதனுடன் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.
பிறகு அதனுடன் தயிர், முட்டைகள், சில துளி லாவண்டர் அல்லது ரோஸ்மேரி ஆயில் சேர்த்து ஒரு மணி நேரம் தலையில் பேக் போட்டு, நல்ல ஷாம்பு சேர்த்து அலச வேண்டும்.
இது தான் எனது ஃபேமசான ஆரோக்கியமான, வலிமையான, அடர்த்தியான ஹேர்பேக் ஹோம் ரெமிடி என குறிப்பிட்டுள்ளார். தான் ஹேர்பேக் போட்ட ஃபோட்டோவுடன் குஷ்பு இதனை வெளியிட்டுள்ளார்.