நடிகர் குஷ்பு என்ன ஹேர் பேக் பயன்படுத்துறாங்கனு தெரியுமா? வெளியான சீக்ரெட்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை குஷ்பு தனது முடிக்கு போடும் ஹேர் பேக் பற்றி கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு
90களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நாகார்ஜுனா, வெங்கடேஷ் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் நடிகை குஷ்பு, தனது இன்ஸ்டாவில் வீட்டில் முடி பராமரிப்பு குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
அதாவது சில துளி அதியவாசியை எண்ணெய்கள் (லாவண்டர்/ ரோஸ்மேரி), சிறிதளவு கருப்பு காபி/ தேநீர், மருதாணி பேஸ்ட் ஆகியவை ஒன்றாக கலக்கி தலையில் தடவ வேண்டும்.
இதனை தலையில் தடவுவதற்கு முன்பு தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கொள்ள வேண்டுமாம்.
மருதாணியை தலையில் தடவி ஷாம்பு போட்டு அலசிய பின்பு, நல்ல கண்டிஷ்னரை பயன்படுத்த வேண்டும் என்றும், இவ்வாறு செய்தால் முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |