சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை... வெறும் 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?
சத்தான ஓட்ஸ் தோசை 15 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் காலை மற்றும் இரவு உணவுகளாக தோசை அதிகமாக சாப்பிடும் நபர்கள் அதிகம். எப்பொழுதும் சாதாரண தோசை என்றால் முகம் சுழிக்கும் நபர்களுக்கு சத்தான ஓட்ஸ் தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும் ஓட்ஸ் உடம்பிற்கு ஆற்றல் அளிக்கவும் செய்கின்றது.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 ஸ்பூன்
ரவை - 1/4 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஓட்ஸ் தோசை செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் ஓட்ஸை போட்டு பொடியாக அரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதனை பாத்திரம் ஒன்றில் போட்டு, அதனுடன் சீரகம், அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி, தயிர் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு, அடுப்பில் தோசை கல்லையை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றி எடுக்கவும்.
சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டுக்கொண்டால், சுவையான, மொறு மொறுப்பான தோசை தயார். நீரிழிவு நோயாளிகளும் இதனை தாராளமாக சாப்பிடலாம்.