Siragadikka Aasai: விஜயாவை அடிக்க பாய்ந்த அண்ணாமலை... வீட்டில் நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை கடத்தி வேறு ஊருக்கு கொண்டு செல்வதற்கு விஜயா திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியல் ஆகும். இதில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகியுள்ளது.
அதாவது மீனா மற்றும் முத்து இவர்களை சுற்றி கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது. மாமியார் விஜயா கொடுமை செய்து வந்தாலும் மீனா அதனை பொருட்படுத்தாமல், தனது வேலையினை செய்து வருகின்றார்.

இதே போன்று முத்துவும் முன்கோபப்காரர் என்றாலும், நியாயமாக நடந்து கொள்கின்றார். இவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் தான் மனோஜ் மற்றும் ரோகினி ஆவர்.
மனோஜ் படித்த முட்டாளாக இருந்து வருவதுடன், ரோகினி தனது முதல் திருமணத்தை மறைத்து மனோஜை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் மீனாவிற்கு ரோகினி குறித்த அனைத்து உண்மையும் தெரிந்த நிலையில், இதனை வீட்டில் சொல்ல விடாமல் ரோகினி மீனானை மிரட்டி காரியத்தினை சாதித்து வருகின்றார்.
இந்நிலையில் ரோகினி தனது மகன் க்ரிஷை ஒரு வழியாக மீனாவை வைத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், இதனை பிடிக்காத மாமியார் விஜயா க்ரிஷை கடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதே போன்று க்ரிஷை கடத்திச் சென்றதுடன், முத்து மடக்கிப்பிடித்து க்ரிஷைக் காப்பாற்றியதுடன், இதற்கு காரணம் விஜயா என்பதையும் கண்டுபிடித்துள்ளார். இதனை தெரிந்த அண்ணாமலை விஜயாவை அடிப்பதற்கு பாய்ந்து வருவது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |