வரலாறு காணாத அளவில் கடகடவென ஏறும் தங்கத்தின் விலை! காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ள நிலையில், இன்று உயர்ந்துள்ளதால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.616 அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,415ஆகவும், சவரன், ரூ.42,704 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, 5,475 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 480 அதிகரித்து, ரூபாய் 43 ஆயிரத்து 320 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சற்று குறைந்து தற்போது, வரலாறு காணாத அளவிற்கு 44 ஆயிரத்தை தொட உள்ளது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரி்க்க பெடரல் வங்கியும் வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியுள்ள நிலையில், தங்கத்தின் மீதான விலை குறையும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில் இவ்வாறு விலை அதிகரித்து அதிகரித்து வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் ரூ.1000 அதிகரித்துள்ளது நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1.30 பைசா குறைந்து ரூ.77.30 ஆகவும், கிலோவிற்கு ரூ.1300 அதிகரித்து ரூ.77,300 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.