கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.. டிசம்பரில் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
திருமணம் எப்போது?
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் அனிருத் உடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த செய்திக்கு கீர்த்தியின் தந்தை முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படியொரு சமயத்தில், கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, எதிர்வரும் டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் வைக்கப்போவதாகவும், அவரின் வருங்கால கணவர் உறவினர் ஒருவர் என்றும், இது முற்றிலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்த திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இருந்த போதிலும் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. அத்துடன் கீர்த்தி சுரேஷின் இந்த முடிவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |