முதல் முறையாக இலங்கை சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்: அவரே வெளியிட்ட பதிவு!
நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கையில் இருப்பதாக குறிப்பிட்டு தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நாளை கொழும்பில் பிரபல ஆடையகம் ஒன்றை கிளை நிலையத்தை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை சென்றுள்ளமை குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த பதிவில், “ கொழும்பு இதோ நான் வருகிறேன். இது எனது முதலாவது பயணம் என்னால் உற்சாகத்தைத் தாங்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷூடன் நடிகர் ரவி மோகனும் பராசக்தி படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
