திடீரென இலங்கைக்கு சென்ற சிவகார்த்திகேயன் : காரணம் என்ன?
பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பராசக்தி திரைப்படம்
அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தெடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இந்த திரைப்படத்தை இயக்குகின்றார்.
மேலும் இப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வா மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படகுக்குழு இலங்கை செல்லவுள்ளதாக ஏற்கனவே தகல்கள் கசிந்தன.
இலங்கையில் யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது ரசிகர்களுடைய வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |