கமகமக்கும் கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?..
கிராமத்து ஸ்டைலில் கருப்பட்டி பணியாரம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக பணியாரம் இருக்கின்றது. கிராமங்களில் இன்றும் பிரதான உணவாக இருப்பதுடன், ஆரோக்கியமான உணவாகவும் பார்க்கப்படுகின்றது.
வெல்லம், கருப்பட்டி இவற்றில் செய்யப்படும் பணியாரம் தென்மாவட்டங்களில் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என்ன செய்முறை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நாட்டு கருப்பட்டி - 1 கப்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
கருப்பட்டியை சுடு தண்ணீரில் போட்டு பாகு எடுத்து தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் கருப்பட்டி கரைசலை கலந்து கூழ் பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தற்போது அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடாக்கவும். பின்பு கல்லின் ஒவ்வொரு குழியிலும் நெய், எண்ணெய்யை தடவவும்.
பின்பு பணியாரத்திற்கு கரைத்து வைத்துள்ள மாவை குழியில் நிரம்ப ஊற்றவும். ஊற்றிய பின், மிதமான சூட்டில் பணியாரத்தை வேக விடவும்.
ஒருபுறம் வெந்ததும், பணியாரத்தை மெதுவாக திருப்பவும். இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக கவனித்து, திருப்பிவிடவும். அவ்வப்போது சிறிதளவு நெய்யை சுற்றி விட்டுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |