ரகசிய திருமணமா? கழுத்தில் தாலியுடன் நடிகை கங்கனா ரனாவத்! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கங்கனா ரனாவத் கழுத்தில் தாலி மற்றும் கையில் வளையல் அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகை கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வெற்றிபெற்று எம்பியாக உள்ளார். கங்கனா ரனாவத், தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர்.

2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான 'கேங்ஸ்டர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான கங்கனா ரனாவத்.தொடர்ந்து வாவ் லம்ஹா, .லைஃப் இன் எ மெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2008-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’தாம் தூம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக கங்கனா முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தலைவி’ என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி கொடுத்த கங்கனா ’சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

பல ஆண்டுகளாகத் திரைத்துறை மீதான தனது அதிருப்தியைத் தெரிவித்து வரும் அவர், சக பிரபலங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருபோதும் தயங்கியதே கிடையாது.
இந்த நிலையில் நெற்றியில் குங்குமம் மற்றும் கழுத்தில் மாங்கல்யத்துடன் இருக்கும் கங்கனாவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கங்கனா ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது ‘குயின் 2’ திரைப் படத்தின் கதாபாத்திரமாக கூட இருக்கலாம் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
कंगना रनौत ने चुपके से शादी कर ली क्या? 🤨
— Rahul Kumar (@MukAn_X) May 21, 2026
गले में मंगलसूत्र जैसा कुछ पहना हुआ दिख रहा है।
दूल्हा कौन है? pic.twitter.com/wz0NYdZFIZ
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |