இந்த படத்தில் இருக்கும் குழந்தை யார்னு தெரியுதா? பிரபலமான நடிகைதான்!
பொதுவாக நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படமொன்று தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
யார் இவர்?
தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகையான வலம் வரும் இவர், முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துதவர்.
இவரின் கணவரும் பிரபல நடிகர். ரீல் ஜோடியாக திரையில் ஜொலித்தவர்கள் தற்போது ரியல் ஜோடியாக அசத்துகிறார்கள். இப்போ யார் என்பதை கண்டுப்பிடித்துவிட்டீர்களா?
இவர் வேறு யாரும் இல்லை இன்றளவிலும் நாயகியாகவே தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ள நடிகை ஜோதிகா தான்.
தமிழ் சினிமாவை பொருத்தரை கதாநாயகிகளுக்கு திருமணத்திற்கு பின்னர் அதே மவுசு இருப்பதில்லை.
ஆனால் ஜோதிகா இன்று வரை கதாநாயகியாகவே நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் அதே அழகுடன் இன்றும் திரையில் ஜொலித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |