அறுவை சிகிச்சையில் தான் ஹன்சிகா எடை குறைத்தாரா? புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு..!
உடல் எடை குறைப்பு பற்றி ஏளனமாக பேசியவருக்கு ஒரு பதிலடியை நடிகை ஹன்சிகா கொடுத்துள்ளார்.
சினிமா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் விஜய், தனுஸ் என முன்னணி நடிகர்களுடன் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவிற்கு வரும் போது கொளு கொளுவென இருந்த ஹன்சிகா, சமீபக்காலமாக எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறி விட்டார்.
இந்த நிலையில் இவரின் எடை குறைப்பு பற்றி பல சர்ச்சையான விடயங்கள் எழுந்தாலும் அதனை ஹன்சிகா கண்டுக் கொள்ளவில்லை.
எடை குறைப்பு பற்றிய விளக்கம்
இதனை தொடர்ந்து கடந்த வருட திருமணத்தின் போது கூட அவரின் முகம் சற்று மெலிந்தாற் போல் தான் இருந்தது.
இதன்படி,“ அண்மையில் ஹன்சிகா அறுவை சிகிச்சை செய்து கொண்டு எடையை குறைத்து விட்டு யோகா தான் காரணம் என நடிக்கிறார்..” என்பது போல் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “ நான் என்னுடைய எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறேன். அதில் ஒன்று தான் யோகா.. நல்ல விடயங்களை பகிர உதவும்..” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு விமர்சகர்களுக்கு பதிலடிக் கொடுத்தாற் போல் அமைந்துள்ளது.
Fitness should be the mantra for all, it brings in lots of positivity, relives stress, relaxes our body and soul.Just 15mins of walk, daily will bring in alot of change in your routine - @ihansika #InternationalDayofYoga2023
— Rinku Gupta (@RinkuGupta2012) June 21, 2023
? @donechannel1 pic.twitter.com/v9py0bCUwt
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |