அய்யோ.. கஷ்டப்பட்டு சம்பாதித்த கௌதமி அபேஷ் செய்த மர்ம நபர்! கொதிப்பில் நடிகை குடும்பத்தினர்
நடிகை கௌதமி கஷ்டப்பட்டு சம்பாதித்த 25 கோடி ரூபாய் சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் ஏமாற்றிவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை கௌதமி
தமிழ் சினிமாவிற்குள் வர முன்னரே தெலுங்கி திரையுலகில் அறிமுகமாகியர் தான் நடிகை கௌதமி.
இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த “குரு சிஷ்யாம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஜொலிக்க ஆரம்பித்தார்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக கோலிவுட்டையே ஒரு வலம் வந்தார். காலங்கள் செல்ல செல்ல முன்னணி நடிகையாக இருந்த கௌதமி தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மாத்திரம் நடித்து வருகின்றார்.
25 கோடி ரூபாய் ஏமாற்றம்
இந்த நிலையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து கூறிய கௌதமி, “நான் 17 வயதில் இருந்து, இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.
2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். இதனால் சினிமாவிலிருந்து நான் சிறிய இடைவெளி அதனால் கொண்டேன்.
மேலும் குடும்ப தேவைக்காக என்னுடைய நிலத்தை விற்கலாம் என முடிவு செய்து நிறுவன அதிபர் ஒருவரை தொடர்பு கொண்டேன். அந்த நிலத்தை 4 கோடிக்கு விற்பனை செய்த அந்த நபர், என்னிடம் 62 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தார்.
அத்துடன் கையெழுத்து மோசடி செய்து என்னுடைய நிலம் 8 ஏக்கரை அவரும் அவரின் குடும்பத்தினரும் மோசடி செய்துள்ளார்கள். இதற்கான நியாயம் பெறாமல் விட மாட்டேன்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செய்தி பார்த்த இணையவாசிகள், “ சொத்தை சம்பாரித்தால் மாத்திரம் போதாது அதனை பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |