ஹீரோயின்களை மிஞ்சிய நடிகை கௌதமியின் மகள்! அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்
நடிகை கௌதமியின் மகளான சுப்பலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கௌதமி
தெலுங்கு திரையுலகில் முதலில் நடிகையாக அறிமுகமான நடிகை கௌதமி.
பின்னர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.
சுப்பலக்ஷ்மி
கௌதமியின் மகளான சுப்பலக்ஷ்மி தனது அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார், இவருக்கு தற்போது 24 வயது தான் ஆகின்றது.
இவர் தனது அம்மாவை விட அழகாக உள்ளார் எனவும் பலர் கூறி வருகின்றன.
தனது அம்மாவுடன் இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவிடும் இவர் தற்பொழுது தனியாக அவரது படத்தை பதிவிட்டுள்ளார்.
“என் தலை முடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பல ரசிகர்களும் பதில் அளித்து வருகின்றனர்.
சிலர் சுப்பலக்ஷ்மி பார்ப்பதற்கு மாதுரி தீக்ஷித் மாதிரி இருப்பதாகவும், விரைவில் நடிகையாக ஜொலிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடம்பரம் இல்லாமலும் மிகவும் எளிமையாக தனது படத்தை எடுத்துள்ளார்.