ரஜினிகாந்த் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்: இலட்சக்கணக்கான பணமும் நகையும் கொள்ளை
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல பெறுமதியான நகைகளும் இலட்சக்கணக்கான நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் தனுஸை 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது. ஆனால் இருவரும் விவாகரத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
வீட்டில் கொள்ளை
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த பெறுமதியான பல இலட்சம் ரூபாய் பணமும் வைர, நவரத்தினம் கொண்ட தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை பொலிஸ்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
குறித்த புகாரில் நெக்லஸ்கள், ஆரம், வைர நகைகள் உள்ளிட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.