பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு.. அடுத்த சேனலுக்கு தாவிய சீரியல் நடிகை - ஷாக்கில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா விஜய் தொலைக்காட்சியிலிருந்து இன்னொரு தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் “பாரதி கண்ணம்மா” சீரியல் தான் ஒரு காலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
இந்த சீரியலில் முதல் பாகம் அருண் மற்றும் ரோஷினி நடித்தார்கள். அவர்களுக்கு வில்லியாக நடிகை பரீனா நடித்து வந்தார்.
இதன் முதல் பாகம் வெற்றிக்கரமான நிறைவடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தை சிப்பு மற்றும் நாயகியாக வினுஷா நடித்து வந்தார்கள்.
சீரியல் மக்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பு இல்லாத காரணத்தினால் சீரியல் நிறைவிற்கு வர இருக்கின்றது.
இன்னொரு சேனலுக்கு தாவிய பரினா
இந்த நிலையில் இரண்டு பாகங்களிலும் வில்லியாக நடித்து வந்த பரினா தற்போது இன்னொரு தொலைக்காட்சிக்கு சென்று விட்டாராம்.
இதற்கான முக்கிய காரணம், பாரதி கண்ணம்மா நிறைவிற்கு வருவதால் ஜீ தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவான “டக்கர் டக்கர் ” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாராம்.
அத்துடன் நடிகை பரினாவின் இந்த அப்பேட் விஜய் தொலைக்காட்சியை சற்று வருத்தமடைய வைத்துள்ளது.
மேலும் ஷோவை ஃபரீனா மற்றும் ஆர்ஜே விஜய் ஆகிய இருவரும் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பரினாவின் இந்த செயல் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பை சம்பாரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |