பழங்கள் சாப்பிட்டாலே போதும்: முக அழகிற்கும், உடல் அழகிற்கும் சூப்பர் டிப்ஸ்களை கொடுத்த நடிகை அஞ்சு!
தமிழில் நடிகையாக வலம் வந்த அஞ்சு பிரபாகரன் தன் அழகு ரகசியங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அஞ்சு பிரபாகரன்
தமிழ் சினிமா உலகில் 80,90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் பேபி அஞ்சு. இவர் இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 1979ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த உதிரி பூக்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகை ஆனார்.
அதற்குப்பிறகு கதாநாயகியாக சில படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிப்படங்களிலும் நடித்திருந்தார்.
ஹெல்த் டிப்ஸ்
ஓட்ஸ், பால், கடலை மா மூன்றையும் ஒன்று சேர்த்து வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவை முகத்திற்கு போடலாம்.இது முகத்தை வறட்சி இல்லாமலும், எண்ணெய்த் தன்மை இல்லாமலும் ஒரு பொழிவான அழகைக் கொடுக்கும்.
முகத்திற்கு எப்போது வீட்டிலே சில பொருட்களை கொண்டு நம் முகத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முகத்திற்கு விட்டமின் ஈ, பாதாம் எண்ணெய் இரண்டும் முகத்திற்கு நல்லது.
உடல் எடையை எப்போதும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் மாதத்திற்கு அளவான உணவுடனும், உடற்பயிற்சியுடனும் மாதம் மாதம் ஒரு அளவை வைத்துக் கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும்.
மேலும், தலை முடி அதிகமாக சீவ கூடாது தொடர்ந்தும் சீவிக் கொண்டு வந்தால் இன்னும் முடி உதிர்ந்துக்கொண்டே போகும். இதற்கு எண்ணெய், வெந்தயம், முட்டை, போன்றவற்றை பயன்படுத்தி ஒரு கலவையாக தலைக்கு சேர்த்துக் கொள்ளுவேன்.
அரிசி உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் பழச்சாறு தான் உடலுக்கு இன்னும் நல்லது.
ஆடை என்று பார்த்தால் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரியும், ட்ரெண்டில் எப்படியான ஆடை இருக்கிறதோ அப்படியான ஆடைகளை தான் அணிவேன்.
மேலும், இன்னும் அழகு சம்பந்தமான விடயங்களை தெரிந்துக்கொள்ள கீழுள்ள காணொளியில் காணலாம்.