4 மாதம் கர்ப்பம்...அப்பாவை விட வயதில் மூத்த நடிகருக்கு 4-வது மனைவியான நடிகை அஞ்சுவின் தற்போதைய நிலை?
அப்பாவை விட வயதில் மூத்த நடிகருக்கு 4-வது மனைவியான நடிகை அஞ்சு தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் ரைவரலாகி வருகின்றது.
'உதிரி பூக்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சு, பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மிக சிறிய வயதிலேயே ஹீரோயினாக மாறியவர்.
இவர் மிக சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை விட வயதில் மூத்த நடிகரான பிரபாகரை 1995 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் பிரிந்தார்.
4 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, தன்னுடைய பெற்றோரிடமே வந்து சேர்ந்த அஞ்சு தற்போது வரை, பெற்றோர் பாதுகாப்பில் தான் உள்ளார்.
இவருக்கு அர்ஜுன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அஞ்சு தந்தையை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்தது ஏன்? அவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
நடிகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்ட போது தனக்கு 17 வயது தான் என்றும், அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாகவே திருமணம் செய்து கொண்டேன்.
அப்போது அவருக்கு தன்னை விட, வயதில் மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது தனக்கு தெரியாது, அவருக்கு நான் 4 ஆவது மனைவி என தெரிய வந்ததும் அவரை விட்டு பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்.
அவரை விட்டு நான் வரும் போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின்னர் சில வாரம் கழித்து அவரே தன்னை தேடி வந்து வாழ அழைத்தார். ஆனால் என்னால் வரமுடியாது என மறுத்துவிட்டேன்.
பின்னர் தன்னுடைய மகனுக்கு 2 வயது இருக்கும் போது, அவர் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வந்தது என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.