இந்த வயதிலும் மகளுடன் என்னமா குத்தாட்டம் போடுறாங்க! படுவைரலாகும் காணொளி
80களின் பிரபல நடிகை அனுராதா மற்றும் அவரது மகள் அபிநயஸ்ரீ இருவரும் இணைந்து அசத்தலான பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை அனுராதா
80கள் காலத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் பட்டையை கிளப்பியவர் தான் நடிகை அனுராதா.

இவர் இதுவரையில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் அரைவாசிக்கும் மேல் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியுள்ளார்.தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அனுராதா டான்ஸ் மாஸ்டர் சதிஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு அபிநயா ஸ்ரீ என்ற மகளும் காளிச்சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.
நடிகை அபிநயஸ்ரீ
விஜய் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் தேவயாணிக்கு முதலாக விஜய் சைட் அடிக்கும் கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் அபிநயஸ்ரீ.

அதனை தொடர்ந்து சப்தம், 123, பந்தா பரமசிவம், கோவில்பட்டி வீரலட்சுமி, இயற்கை, ஆர்யா, வயசு பசங்க, உணர்ச்சிகள், பாலக்காட்டு மாதவன், இளமை ஊஞ்சல், ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, போஜ்புரி என பல்வேறு மொழிகளில் இவரும் நடித்துள்ளார்.

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். சினிமாவில் அம்மா அத்தனை படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சாதாரண கதாபாத்திரங்கள் மட்டும் கவர்ச்சி நடிகையாகவே அபிநயஸ்ரீயும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அம்மாவுடன் இணைந்து அபிநயஸ்ரீ சமூக வலைத்தளங்களில் நடனமாடி காணொளிகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அசத்தலான பாடல்களுக்கு அம்மாவும் மகளும் இணைந்து செம குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |