மாடர்ன் உடையில் நடிகை அனிகா... அழகில் முன்னணி நடிகையையே மிஞ்சிடுவாங்க போல
நடிகை அனிகா சுரேந்திரன் பெரும்பாலான நேரங்களில் கிளாமர் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.
2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, தமிழில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

பின்பும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அசத்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து தனக்கான இடத்தினை தக்க வைத்து வருகின்றார்.

இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது 21 வயதாகும் நிலையில், புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது பெரும்பாலான நேரங்களில் கிளாமர் உடையிலும், சேலையிலும் புகைப்படங்களை அவதானித்து வருகின்றோம். தற்போதும் தனது தோழிகளுடன் புடவையிலும், மாடர்ன் உடையிலும் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

YOU MAY LIKE THIS VIDEO
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |