அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகை ஆண்ட்ரியா...என்ன பண்ணிக்காங்கன்னு பாருங்க
நடிகை ஆண்ட்ரியா பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது பிரபல பொற்கோவிலுக்குச் சென்று தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையுடன் ஜொலித்த வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய இவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நடிகையாகவும் நல்ல அடையாளத்தை உருவாக்கிக்கொடுத்தது.
மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் ஆண்ட்ரியாவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வரகின்றார்.
இந்நிலையில் தற்போது சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படும் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது பிரபல பொற்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்... வைரலாகும் நடிகர் மாதவனின் நெகிழ்ச்சி பதிவு
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
