குழந்தை பார்க்காமல் என்ன செய்றீங்க.. நடிகை அம்மு கிளப்பி விட்ட சர்ச்சை
“தெருவில் இருக்கும் நாய்கள் குழந்தைகளை கடிக்கும் வரை அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறீர்கள்..” என நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசியது இணையத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசப்பட்ட விடயம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்தியாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் தெருவில் கிடக்கும் நாய்கள் காப்பகங்களில் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு முறையான தடுப்பூசி போடவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
இது குறித்து கடந்த வாரம் நீயா நானாவில் விவாதங்கள் கிளம்பின.
அன்சீன் காட்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்
நீயா நானாவில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சின்னத்திரை நடிகை அம்மு மற்றும் நடிகர் படவா கோபி ஆகியோரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் நீயா நானாவில் பேசியது தவறு என படவா கோபி மன்னிப்பு கேட்டு காணொளியொன்றை பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அம்மு, “நீயா நானா நிகழ்ச்சி சுமாராக 8 மணிநேரம் ஷூட்டிங் செய்யப்பட்டது. ஆனால் வெறும் 45 நிமிடங்கள் தான் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. கோபிநாத் எங்களுக்கு சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டு வந்து நிகழ்ச்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.
டிஆர்பிக்காக செய்த வேலை தான் இது, அத்துடன் நிகழ்ச்சியில் எடிட் செய்யப்படாத வெர்ஷனை ஒளிபரப்ப வேண்டும் ” என பேசினார்.
பெற்றோர்களை சாடிய நடிகை அம்மு
நடிகை அம்மு பேசியதை கேட்ட இணையவாசிகள் மீண்டும் விமர்சனங்களை கொட்ட ஆரம்பித்து விட்டனர். மேலும், “ எனக்கு ஒரு கோபம் உள்ளது. உங்கள் வீட்டு குழந்தைகளை நாய்கள் கடிக்கும் வரை நீங்கள் எங்கே போனீங்க.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவில்லையா? நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் சத்தமாக கத்தினாலே அதற்கு ஓடிப்போய் பார்ப்போம். குழந்தைகள் கதறும் வரை யாரும் பார்க்கவில்லையா?” என மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருக்கிறார்.
அம்முவின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள், “நீங்கள் பேசுவதில் நியாயம் இல்லை. மாறாக உங்களுடைய குழந்தைக்கு இந்த நிலை வந்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |