த்ரிஷா இடத்தில் நான் இருந்தால்...நிச்சயம் இதை தான் செய்வேன் - நடிகை அம்பிகா ஓபன் டாக்!
முதல்வர் விஜய் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்றதை நேரில் சென்று பார்த்தார். அப்போது அஜித்தை சந்தித்த விஜய், அவரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
விஜய் மற்றும் அஜித் இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த தருணத்தின் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி, இரு தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டன. இந்த நிலையில், அதே நிகழ்வில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலானது.

குறிப்பாக வீடியோ ஒன்றில் திரிஷா தோன்றும் போது, விஜய் தனது முகத்தை திருப்பிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா தொடர்பான பல்வேறு கருத்துகளும் இணையத்தில் பரவி வருகின்றன.

மூத்த நடிகை அம்பிகா ஓபன் டாக்!
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய நடிகை அம்பிகா, “திரிஷா தனது நண்பருடன் ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், தன்னுடைய நட்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், தற்போது விஜய் இருக்கும் இடம் வேறு. அவர் ஒரு மதிக்கத்தக்க பொறுப்பில் இருக்கிறார். அந்த இடத்தில் இருக்கும் ஒருவர், தன்னுடைய ஒவ்வொரு செயலாலும் மற்றவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் த்ரிஷா இருக்கும் இடத்தில் இருந்திருந்தால், என்னால் அவருடைய பெயருக்கு எந்தவிதமான களங்கமும் வரக்கூடாது என்றும், என்னால் அவருக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் ஏற்படக்கூடாது என்றும் நினைப்பேன். அதனால், இதுபோன்ற சூழ்நிலையில் நான் சற்று ஒதுங்கிக் கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.அம்பிகாவின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, விஜய்யின் தற்போதைய பொது வாழ்க்கை மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு காரணமாக, தனிப்பட்ட நட்புகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அவருடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்களை இணைத்தில் கிளப்பிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |