NEEK பட நாயகனுக்கே டப் கொடுக்கும் சஞ்சீவ்.. ஆல்யாவுடன் போட்ட டூயட்- React செய்த பவிஷ்
NEEK பட நாயகனுக்கே டப் கொடுக்கும் வகையில் சஞ்சீவ்- ஆல்யா கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சஞ்சீவ்– ஆல்யா
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் தான் சஞ்சீவ்– ஆல்யா மானசா.
இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகளும் தற்போது இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஆல்யா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இனியா சீரியலில் நாயகியாக நடித்தார். மாறாக சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாக யூடியூப் சேனலொன்றையும் நடத்தி வருகிறார்கள். இவர்களின் காணொளிகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.
பவிஷ் கொடுத்த ரிப்ளை
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா- சஞ்சீவ் இருவரும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தனுஷ் இயக்கத்தில் பவிஷ்- அனிகா சுரேந்திரன் நடிப்பில் வெளியான NEEK பட பாடலுக்கு வைப் செய்துள்ளனர்.
இதனை அவர்களின் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அதற்கு பவிஷ் மற்றும் ரம்யா ரெங்கநாதன் இருவரும் React செய்துள்ளனர்.
இந்த காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் இவர்களுக்கு லைக்ஸ்களையும் வாரி வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |