தாங்க முடியலம்மா.. மனைவியை வேலைக்காரியாக பார்க்கும் கணவர்கள்- கோபிநாத் கொடுத்த பதில்
மனைவிமார்களை வேலைக்காரியாக நடத்தும் கணவர்கள் பற்றி பெண்ணொருவர் நீயா நானாவில் விளக்கமாக பேசியிருக்கிறார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயா நானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
பெண்ணின் குமுறல்
இந்த நிலையில் மனைவிமார்களை கொடுமைப்படுத்தும் ஆண்களின் அட்டகாசங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பெண்,“என்னுடைய கணவர் நான் என்ன வேலை செய்தாலும் அது பற்றிய குறைகளை மட்டும் தான் கூறுவார். என்ன தான் செய்தாலும் வீட்டில் சும்மா தானே இருக்க.. என்ன செய்த..? என அடிக்கடி என்னிடம் கேட்பார். அதனை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஆண்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர், வீட்டில் இருக்கும் பெண்களை தான் அதிகமாக தொந்தரவு செய்வார்கள்.
ஏனெனின் அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். நாங்கள் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுகிறார்கள்.” என அவருக்குள் இருந்த கவலைகள் அனைத்தையும் கொட்டித்தீர்த்துள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. “பெண்கள் இப்படி தான் எமது சமூகத்தில் வாழ்கிறார்கள்..” என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |