தலையில் காட்போர்டுடன் கேரவனை நோக்கி ஓடும் ஆல்யா..வெயிலுக்கு அவ்வளவு பயமா?
தலையில் காட்போர்ட் வைத்து கொண்டு கேரவனை நோக்கி ஓடும் ஆல்யாவின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை பயணம்
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எல்லாம் இவர்களின் காதலை வெளிப்படையாக மேடையில் கூறி வந்தார்கள். இந்த நிலையில் ஆல்யா மானசாவிற்கு தற்போது ஐலா மற்றும் ஆர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
வைரலாகும் காட்சி
அந்தவகையில் ஆல்யா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.
தற்போது கோடை வெயில் பல்லை காட்டிக் கொண்டு அடிப்பதால் வெளியில் செல்வதற்கு கூட பயமாக இருக்கின்றது.
இப்படியான ஒரு நிலையில் நடிகை ஆல்யா ஷீட்டிங் முடித்து விட்டு கேரவனுக்கு வெயிலில் சிக்காமல் தலையில் கார்போர்ட் சாய்த்து கொண்டு ஓடுகிறார்.
இந்த காட்சி இணையவாசிகளை நகைக்க வைத்துள்ளது. அத்துடன் வெயிலுக்கு அவ்வளவு பயமா என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.