சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும்
தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
நம்மிள் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதன் தாக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசமான உணவு பழக்கங்களே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அப்படியாயின், பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பையாகும். இது கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரியும்.
பித்தப்பையில் வளரும் கற்களானது, பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது உருவாகிறது.
இந்த நோயினால் இந்தியாவின் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் இந்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகமாக அவஸ்தைப்படுகிறார்கள். பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் இருக்கின்றன.
அந்த வகையில் சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் வளருமா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருத்தல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் தோன்றலாம்.
2. கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள் உள்ளிட்ட நோய்களால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது.
3. பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுவதால் அறிகுறிகளை பெரிதாக இனங்காண முடியாத நிலை உள்ளது. ஆகையால் உரிய காலத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
4. வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையில்லை. மாறாக பித்தப்பையில் கற்கள் இருந்தால் அதனை மருத்துவரின் உதவியுடன் கரைக்கலாம். இந்த முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பித்தப்பை கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் அளவான எடையில் இருக்கும் பொழுது நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.
- பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். முறையான உணவு பழக்கங்கள் இருந்தால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் உயிர் வாழலாம்.
- கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகள் எடுத்து கொள்வதை குறைக்க வேண்டும்.
- சிலர் இறைவனுக்காக என்றுக் கூறிக் கொண்டு அடிக்கடி விரதம் இருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி சாப்பிடாமல் இருந்தால் பித்தப்பையின் இயக்கம் குறைந்து பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
- புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மோசமான பழக்கங்களாலும் பித்தப்பை, கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சினைகள் வரலாம்.
- கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தபட்ட உணவு வகைகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |