அடேங்கப்பா.. ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தன்னுடைய திறமையால் முன்னணி இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அழகை பயன்படுத்தியும், தன்னுடைய பின்புலத்தை பயன்படுத்தியும் சாதனை செய்யும் பிரபலங்களில் திறமையை மட்டும் வைத்து கொண்டு பயணிப்பவராக ஐஸ்வர்யா ராஜேஷ் பார்க்கப்படுகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கோடி கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமாவிற்குள் வர முன்னர் சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்தாராம். அப்போது அவரது சம்பளம், ரூ.225தான்.
இதனை தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். இவரது மாத வருமானம் மட்டும் ரூ.2 லட்சம் என்றும், சொந்தமாக வீட்டு மனை, சொகுசு கார் ஆகியவையும் ஐஸ்வர்யாவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷிற்கு, மொத்தமாக ரூ.11 கோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ இவ்வளவு சொத்துக்களா?,” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |