வக்காலத்து வாங்க வந்த பூர்ணிமா.. அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கி லாக் செய்த வினுஷா- வீடியோ
உருவ கேலி செய்த நிக்ஷனை நியாயப்படுத்தும் வகையில் பூர்ணிமா பேசியதும் வினுஷா கடுப்பாகியுள்ளார்.
பிக்பாஸ்
நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜனவரி 14-ந் தேதி பிரம்மாண்ட பைனல் நடைபெற உள்ளது.
சீசன் துவங்கும் போது வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் தற்போது மணி, தினேஷ், விஷ்ணு, மாயா, அர்ச்சனா ஆகிய 5 பிரபலங்கள் இருக்கிறார்கள்.
இதில் யார் டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்பதனை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக நிக்ஷன் பார்க்கப்படுகிறார். குறைவான வாக்குகளால் வெளியேறிய நிக்ஷன் இன்றைய தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதன்போது நிக்ஷனை அழைத்து வினுஷா தன்னுடைய உருவகேலி குறித்து பேசியுள்ளார். அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய நிக்சன், தான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை அது தவறாக காட்டப்பட்டுள்ளது என்று தன்னை நியாயப்படுத்திக் கொண்டார்.
பூர்ணிமாவிற்கு வினுஷா கொடுத்த ரிப்ளை
இதனை கேட்ட வினுஷா, “வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..” என கூறி விட்டார்.
இதனால் நிக்ஷனுக்கு வினுஷாவை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இப்படியொரு நிலையில், நிக்ஷனுக்கு ஆதரவாக பேசுவதற்காக பூர்ணிமா இடையில் வந்தார்.
பூர்ணிமாவை பார்த்து வினுஷா, “ இந்த விடயம் வெளியில் வந்த போது அப்போ ஏன் நிக்ஷனை பார்த்து நன்றி என கூறினீர்கள். பின்னர் மேக்கப் ரூமில் பேசும்போது நிக்சன் சொன்னது ஜோக் எனவும் ஏன் நியாயப்படுத்துனீங்க” என கேட்டார்.
வழக்கம் போல் பூர்ணிமா சொல்ல வருவதை சரியாக சொல்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
வினுஷாவிடம் பேசி பூர்ணிமாவால் வெல்ல முடியாது என தெரிந்த பின்னர் அவர் சார்பாக பேசினார். இதனை பார்த்த ரசிகர்கள், “இன்னும் நீ திருந்தவே இல்லையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
If fakeness has a face, that is #Poornima , how could you defend this rather than asking sorry simply ??#Vinusha simply rocked it ??#BiggBossTamil7#BiggBoss7Tamil
— BB Mama (@SriniMama1) January 12, 2024
pic.twitter.com/U3fBTvn9He
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |