ஓபனா சொல்லிட்டாங்களே! திருமண கேள்விகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டியொன்றி திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளினியான மீடியா துறையில் என்ரீ கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்சியின் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது.
பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களையே தெரிவு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மை காலமான கிளாமர் கதாப்பாத்திரங்களின் மீதும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
தற்போது 35 வயதை எட்டியுள்ள இவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகின்றார்.
ஓபன் டாக்
இந்நிலையில், அண்மையில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற அவரிடம் திருமணம் எப்போது என ஒரு ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர், மீண்டும் ரசிகர்களை நோக்கி, முதலில் நீங்கள் சொல்லுங்கள் திருமணம் செய்யலாமா வேண்டாமா என கேட்கிறார், அதற்கு பலரும் வேண்டாம் என்கிறார்கள்.
உடனே சிரித்தபடி ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிப்பாக திருமணம் நடக்கும், நானே முதலில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |