நாய்க்கு கூட சாதிப் பெயரா? இளம்நடிகையின் சர்ச்சை செயல்
பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன், தன்னுடைய செல்ல நாய்க்கு காபி என பெயரிட்டுள்ளதுடன், காபிமேனன் புதிய பேஜ் ஒன்றை தொடங்கியுள்ளது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தமிழ் படம் 2, ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேமன்.
தான் வளர்க்கும் செல்ல பிள்ளையான நாய்க்கும், இவர் சாதி பெயரை சேர்த்துள்ளது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, வெளிநாட்டு ரக நாயை வளர்த்து வரும் ஐஸ்வர்யா, அதன் நிறத்துக்கு ஏற்ப அதற்கு காபி என பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்நாய்க்கு இன்ஸ்டாகிராமில், CoffeeMenon என புதிய பேஜ் ஒன்றை தொடங்கி, நாயின் சேட்டைகளை பதிவிட்டு வருகிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நாய்க்கு கூட சாதிப்பெயரா என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.