இனி இது வேண்டாம்.. மொத்தமாக விலகிய ஐஸ்வர்யா லட்சுமி- கவலை சினி ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹலோ மம்மி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “ சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பொழுது அது என்னுடைய வேலைக்கு பாதகமாகி விட்டது. என்னுடைய சிந்தனை தீய வகையில் பாதித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாவிட்டால் என்னை மறந்து விடுவார்கள்..” என ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபனாக பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் பரபரப்பாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
