நலினமான இடைத்திற்கு சொந்தக்காரியான அதிதி ராவ்-டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
தன்னுடைய இடை நலினத்தினால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அதிதி ராவ்வின் டயட் பிளான் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நடிகை அதிதி ராவ்
தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நலினத்தை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை அதிதி ராவ்.
இவர், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர்.
இதனை தொடர்ந்து, சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தனர். அதன் பின்னர், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தவறியும் இதை செய்ய மாட்டேன்..
இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் சினிமாவுக்கு பிரேக் விட்ட அதிதி ராவ் ஹைதரி பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். பேட்டியொன்றில் அதிதி ராவ் அவரின் டயட் பிளானை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “ எனக்கு தென்னந்திய உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றில் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். வழக்கமாக மதிய உணவில் காய்கறிகள் அதிகமாக வைத்து சாப்பிடுவேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இரவு உணவில் புரதச்சத்த அதிகமாக சேர்த்துக் கொள்வேன்.

மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்ட உணவுகள் அதிகமாக சாப்பிடுவேன். என்ன உணவு சாப்பிட்டாலும் இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.
யோகா, நடன பயிற்சி போன்ற விடயங்களில் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுவும் இல்லை. எப்போதும் சிம்பிளான டயட் பிளானை தான் பின்பற்றி வருகிறேன்...” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |