திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய அபிநயா- எங்கே தெரியுமா?
மாற்றுத்திறனாளி நடிகை அபிநயா அவருடைய நீண்ட நாள் காதலரை கரம்பிடித்து விட்டு, தற்போது ஹனிமூனில் பிஸியாக இருந்து வருகிறார்.
நடிகை அபிநயா
நடிகர் சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான “நாடோடிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அபிநயா.
இவர், ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தாலும், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், சூர்யாவின் 7ஆம் அறிவு, ஈசன், ஜீனியஸ், வீரம், தனி ஒருவன், குற்றம் 23, சீதா ராமம், மார்க் ஆண்டனி, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், நடிகர் விஷால் உடன் அபிநயாவுக்கு காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்திகள் கிளம்பியது.
ஹனிமூன் எங்கே தெரியுமா?
இந்த நிலையில், அபிநயா தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனின் அபிநயாவின் கணவரும் ஒரு மாற்றுதிறனாளி தான்.
அபிநயா, திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ஹனிமூனுக்கு லண்டன் சென்றுள்ளார்.
லண்டனில் உள்ள ஆக்வா ஷார்ட் ரெசார்ட்டில் அபிநயா தனது கணவருடன் ஹனிமூனை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்திற்கு சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் வந்திருக்கிறார்கள்.
அவர்களை சந்தித்து ஆசி பெற்ற அபிநயா அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
