Actor Vishal: நடிகர் விஷாலுக்கு என்ன பிரச்சனை? மருத்துவமனை அளித்த விளக்கம் இதோ
நடிகர் விஷாலுக்கு உடலில் என்ன பிரச்சனை என்பதை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஷால், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
நடிகராக மட்டுமின்றி, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தினையும் பொறுப்பாக நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று நடிகர் விஷாலை அவதானித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த 2012ம் ஆண்டு நடித்த திரைப்படம் தான் மதகஜராஜா.
இப்படம் 2013ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றிருந்த நிலையில், பல காரணங்களினால் தள்ளிப் போயுள்ளது.
தற்போது இப்படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால் உட்பட பலரும் கலந்து கொண்ட நிலையில், விஷால் மைக்கை பிடிக்க முடியாமல் நடுக்கத்துடன் பிடித்து பேசியுள்ளதுடன், உடலும் மிகவும் மெலிந்து காணப்படவும் செய்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் முயற்சித்து வந்தனர்.
தற்போது, விஷாலின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை மற்றும் ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனவும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிர மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |