அப்பாவின் தற்போதைய நிலை - விக்ரம் மகன் பரபரப்பு அறிக்கை
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறார்.
விக்ரம் நடிப்பில் கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
அதுமட்டும் இன்றி அவருக்கு மாரடைப்பு என்றும் தகவல் பரவியது. இது குறித்து விக்ரமின் மகன் துருவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விக்ரமின் மகன் துருவ் விளக்கம்
அதில், அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளே, அப்பாவுக்கு லேசான நெஞ்சு உபாதை இருந்தது, அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். செய்திகள் தவறாகக் கூறுவது போல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.
இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சியான் இப்போது நலமாக இருக்கிறார்.
இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும் பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்." என துருவ் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
அதே சமயம், நடிகர் விக்ரம் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் விக்ரம் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.