விக்ரமுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? தற்போதைய உடல்நிலை - அலட்சியம் வேண்டாம்... எச்சரிக்கை
நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் விக்ரம் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது.
— Suryanarayanan M (@sooriaruna) July 8, 2022
யாரோ சொல்லக் கேட்டது, கூகுளில் தேடியது என எல்லாவற்றையும் போட்டு ஒட்டுமொத்தமாகக் குழப்பி, அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது.
ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம். நெஞ்சுவலி மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்பதில் குழப்பம் இருக்கும். முதலில் அவற்றிற்கான வித்யாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
பொதுவாக இவை இரண்டுக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் தெரிந்திடும். மூச்சு வாங்குதல், மார்பில் வலி,அதீத வியர்வை,குமட்டல் போன்றவை ஏற்படும்.
மாரடைப்பு
இதயத்தில் இருக்கிற தசைகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதயத்தில் இருக்கிற கார்னரி ஆர்டரிஸ் தான் இதற்கு பொறுப்பு. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கூட பெரும் பிரச்சனையாகிடும்.
அந்த ஆர்டரிஸில் நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிற கொழுப்பு,ப்ரோட்டீன், கால்சியம் போன்றவை அங்கே படர்ந்திடும்.
இதனால் ரத்த ஓட்டத்தில் சீரான தன்மை இருக்காது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வர நாளடைவில் அவை அடைப்பு ஏற்படும். ஒரு கட்டத்தில் அந்த வழிதடத்தையே அடைக்கும் அளவிற்கு வளர்ந்ததும் நமக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
கண்டுபிடிக்கும் வழி
மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும் . சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். பொதுவாக இந்த வலி நடு நெஞ்சில் ஏற்படக்கூடும். பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோல்பட்டை பகுதியிலும் அப்படியே முதுகுப் பக்கமும் வலி பரவிடும்.
சிலருக்கு பற்கள், தடை பகுதியிலும் வலி இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரியான வலி இருக்காது, ஐந்து நிமிடங்களுக்கு மேல் இவை நீடிக்காது. அதற்குள்ளாகவே வலி இருக்கும்.
உணர்வு
இந்த வலி எடுத்தவுடனேயே உங்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது. அதிகமாக வியர்க்கும், குமட்டல் ஏற்படும். மார்பில் அதிகபட்ச வலி ஏற்படும் போது தான் மக்களுக்கு பயமே ஏற்படுகிறது.
சில நேரங்களில் அதனை கண்டுகொள்ளாமல் விட்டாலும் மாரடைப்பு ஏற்படுமே என்கிற பயமே பல பிரச்சனைகளை ஏற்படுத்து விடுகிறது.
பேனிக் அட்டாக்
ஹார்ட் அட்டாக் தெரியும். இதென்ன பேனிக் அட்டாக்? உங்கள் உடலில் அட்ரினலின் அளவு திடிரென அதிகமாக உயரும் போது மாரடைப்பு ஏற்படும் போது தோன்றுகிற சில அறிகுறிகள் தோன்றிடும்.
இது மாரடைப்பு தான் என்று நீங்கள் நினைப்பது தான் அடுத்தடுத்த சிக்கல்களை உருவாக்கிடும்.
மூச்சு வாங்குதல்
பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாகாகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.
பேனிக் அட்டாக் அறிகுறிகள்
கடினமான வேலை செய்யும் போது மட்டுமல்ல பிற சாதரண நாட்களிலும் ஏற்படக்கூடும். இந்த வலி நீண்ட நேரம் இருக்கும். வலி ஆரம்பித்து சுமார் பத்து நிமிடங்கள் கழித்தே நம்மால் தாங்க முடியாத வலி ஏற்படும்.
இந்த வலி நம் மார்பு கூட்டைச் சுற்றியே இருக்கும். இந்த வலி வலதுப்பக்கம், விரல்கள் கால்ஆகியவற்றில் வலி ஏற்படும் மயக்கம் வருவது போலத் தோன்றும்.
என்ன செய்ய வேண்டும்?
மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
சில அறிகுறிகளை வைத்து மட்டும் நீங்களே எதையும் உறுதி செய்து கொள்ள வேண்டாம்.
உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில் அதுவே பெரும் பிரச்சனை ஏற்படுத்திடும் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.
வந்த பின் அவதிப்படுவதை விட அதனை வராமல் தடுப்பது தான் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதை ம்றக்க வேண்டாம்.