நடிகர் விக்ரமின் காரை துரத்திய ரசிகர்கள்! விக்ரம் கொடுத்த தரமான பதில்
நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் பாகம்2 திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், விக்ரம் தொடர்பில் ஒரு காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்ரம்
நடிகர் விக்ரம் குறித்து சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. இவரின் அசாத்திய நடிப்பு திறமைக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
காசி, சேது, அந்நியன், சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்தது.
தற்போது இவர் நடிப்பில் வீர தீர சூரன் பாகம்2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகின்றது.
அருண் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
சித்தா படத்திற்கு பின்னர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷன் பணிக்காக வேகமாக சென்றுக்கொண்டிருந்த போது ,இரண்டு நபர்கள் விக்ரம் சென்ற காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது மட்டுமின்றி, காரில் உள்ள விக்ரமைப் பார்த்ததும் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது ரசிகர்களுக்கு மரியாதை கொடுத்து காரை நிறுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்தது மட்டுமன்றி அப்போது தனது ரசிகர்களை ஹெல்மெட் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டும் படி அட்வைஸ் செய்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
தன்னை ரசிக்கும் ரசிகன் மீது அக்கறை கொண்ட நடிகர் @chiyaan 💯💖💖
— ✧ CVF_MUNI ✧ᴸᵒʸᵃˡ ᶠᵃⁿ🎭 (@Chiyaan_muni1) March 28, 2025
ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டு கண்ணா 🫂🫂🫂💖#ChiyaanVikram #VeeraDheeraSooranBlockbuster pic.twitter.com/DHQlE7BDgm
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
