அசானி கதையை கேட்டு உதவ முன் வரும் நடிகர் விஜய்.. பாராட்டுக்களை குவிக்கும் ரசிக பெருமக்கள்!!
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்து சரிகமப நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அசானிக்கு உதவி செய்வதாக நடிகர் விஜய் முன் வந்துள்ளார்.
சரிகமபவில் அசானி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.
இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து வரும் சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் பண பிரச்சினைக் காரணமாக சரிகமபவிற்கு தெரிவான அசானி தாமதமாக வருகை தந்துள்ளார்.
அவரை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பக் கூடாது என நினைத்த தொலைக்காட்சி குழுவினர் அசானிக்கு பாட வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அசானி தன்னுடைய காந்தக் குரலால் பாடல் பாடி மிரள வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அசானி மூன்று வாரமாக பாடியுள்ளார், இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்கள் பாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அசானிக்கு உதவிச் செய்யும் விஜய்..
இப்படியொரு நிலையில் அசானியின் குடும்பம் வறுமையில் இருப்பதால் பிரபல தொழிலதிபர் ஒருவர் வீடு கட்டி கொடுப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் தமிழகத்தை சேர்ந்த பாடலாசிரியரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய் அசானிக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ சிறுமி அசானிக்கு தேவையான உதவிகளை நான் செய்ய தயாராகவுள்ளேன்.” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அசானியின் குடும்ப கதையை கேட்கும் பொழுது கவலையாகவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |