சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த இலங்கைப் போட்டியாளர்: யார் இந்த அசானி?
இந்தவாரம் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த சிறுமி பற்றிய தகவல்களை முழுமையாக சேகரித்து எழுதப்பட்ட பதிவுதான் இது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இது ஒரு பாடல் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இருந்து பலர் தன் பாடும் திறமையை வெளிப்படுத்த இந்நிழச்சிக்கு வந்திருக்கிறார்கள்.
தற்போது சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியை அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், நடிகை அபிராமி மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
யார் இந்த அசானி?
பெருந்தோட்ட தொழிலாளிகளான கனகராஜ் - சத்தியபவானி ஆகியோரின் செல்ல மகள் தான் இந்த அசானி. இவர் தற்போது 14 வயதாகின்றது.
150 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தான் அவர்களின் சொந்த ஊர். அதன் பிறகு அவர்கள் இலங்கை அகதிகளாக இடம்பெயர்ந்து தற்போது இலங்கையின் கண்டி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வருகின்றனர். அசானியின் மற்றொரு சகோதரர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு வெறும் எஃப்எம் ரேடியோவைக் கேட்டு பாடல்களை பாடுவது தான் வழக்கம். அவரது திறமையை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இந்த சரிகமப நிகழ்ச்சிக்கு இவர் பாடிய பாடல் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்குள் நுழைந்தது எப்படி?
இந்த நிகழ்ச்சிக்கு தான் பாடல் ஒன்றை பாடி அனுப்பி வைத்திருந்து பணப் பற்றாக்குறைக் காரணமாக இவரால் மெகா தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதையறிந்த ஊர் மக்கள், உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். அதுமட்டுமின்றி, தங்களின் உண்டியல் பணத்தைக் கூட கொடுத்து வெற்றிப் பெற்று வா என்று வாழ்த்தி அனுப்பியுள்ளார்கள்.
இவ்வாறு இந்தியாவிற்கு வந்ததும் விமான நிலையத்தில் இவர் சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்ற தான் வந்திருக்கிறார் என்று அறிந்தவர்கள் அசானியை அழைத்து அவரை ஓரிரண்டு பாடல்கள் பாடச் சொல்லி நிச்சயமாக வெற்றிப் பெறுவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள்.
நடுவர்களின் பாராட்டு
மெகா ஆடிஷனில் பங்கேற்காத அசானிக்கு நிகழ்ச்சியில் தற்போது பாட வாய்ப்பு அளித்துள்ளனர் நடுவர்கள். அதற்கினங்க அவர் அந்த மேடையில் “ராசாவே உன்ன நம்பி” என்ற பாடலை பாட அவருக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரின் பாடலுக்கு பெரும் வரவேற்புக் கொடுத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நடுவர்கள் இவரைப் பற்றி பேசுகையில், சமுத்திரத்தை கடந்து தமிழகத்தை நம்பியதால், அசானிக்கு நடுவர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அசானி தனது ஆத்மார்த்தமான குரலால் மேடையை அதிர வைக்கிறார்.
மேலும், அவரது திறமையை கண்டு நடுவர்களும் வியந்துபோயிருந்தனர். வெறும் ரேடியோல பாட்டு கேட்டுட்டு இப்படி பாடுவாங்களா? இது உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு. பயிற்சி அதிகமாக இருந்தால் நிறைய சம்பாதிப்பீர்கள் என நடுவர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்த இலங்கையின் இனிய குரல் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பது இலங்மை மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்புதான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |