மக்களின் துயர் துடைக்க களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்- டுவிட்டரில் ஆதரவு
மக்களின் துயர் துடைக்க ஒன்றாக கைக்கோர்ப்போம் என விஜய் பதிவிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புயல்
இந்தியா - சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புயலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வெள்ளம் காரணமாக அத்தியவசியமான தேவைகளை கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
மேலும் சமூக வலைத்தளங்களில் அடிப்படை தேவைகளையும் வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காகவும் உதவி செய்யுமாறு உதவி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீடியா பிரபலங்கள், நடிகர்கள் என வேறு பகுதியில் இருப்பவர்கள் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
விஜயின் டுவிட்டர் பதிவு
அந்த வகையில் சூர்யா, கார்த்தி மற்றும் ஹரிஷ் கல்யாண் போன்றவர்களும் பணங்கள் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் மக்களுக்கு உணவு மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகின்றன.
இது குறித்து நடிகர் விஜய் அவரின் டுவிட்டர் பக்கத்தில், “ துயர் துடைப்போம் கைக்கோர்ப்போம்..” என கருத்து பகிர்ந்துள்ளார்.
அத்துடன் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்…
— Vijay (@actorvijay) December 6, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |