கொரோனா வரவே கூடாது.... இறப்பதற்கு முன்பு பிரபல நடிகர் வெளியிட்ட காணொளி
நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இவர் கடைசியாக வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சுபா வெங்கட் சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிவி தொடர்களில் நடித்துள்ள இவர், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காரணமாக பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவது வேதனையை அளிக்கின்றது.
இந்நிலையில் நடிகர் சுபா வெங்கட்டின் தான் இறப்பதற்கு முன்பு கொரோனா குறித்த தகவல்களையும், தனது உடல்நிலையும் குறித்து காணொளி லைவ் வந்துள்ளார். அக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.