வடிவேலு ஒரு குடிவேலு.. இது தான் ரெட் கார்டுடன் வெளியேற காரணம்! சீக்ரெட்டை உடைத்த இயக்குநர்
நடிகர் விஜயகாந்தை குடிக்காரர் என கூறும் வடிவேலு ஒரு குடிவேலு என இயக்குநர் பிரவீன் காந்தி கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரெட் கார்டுடன் வெளியேறிய பிரபலம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியாக இருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவர் சினிமாவிலுள்ள அனைத்து நடிகர்களுடனும் துனையாக கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்.
“இம்சை அரசன்” இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குநர் சங்கருடன் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவருக்கு ரெட் கார்ட் கொடுப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது காலம் சினிமா பக்கம் வரமால் விலகியிருந்தார்.
சினிமாவிலிருந்து விலகி அரசியல் பக்கம் சென்றார். அப்போது அரசியலில் இருக்கும் நடிகர் விஜயகாந்த் ஒரு குடிக்காரர் என பிரசாரம் செய்து வந்தார். இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக காணப்பட்டது.
பிரசாரத்தில் உலறிய வடிவேலு
இந்த நிலையில் நடிகர் சிங்கமுத்து வடிவேலுக்கும் ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, “வடிவேலு பகலில் குடிக்க மாட்டார், இரவில் தான் குடிப்பார். வடிவேலுவிடம் 2 லைன் சொன்னா போதும், அதை சீனாக டெவலப் செய்துவிடுவார்.
அதுவும் ஸ்பாட்டிலேயே அதை செய்வார். அப்படி ஒரு மாபெரும் கலைஞன். என பேசியுள்ளார். மேலும் விஜயகாந்திடம் பெருமைத்தனம் இல்லை. யாரையும் பாகுபாடுடன் பார்க்கமாட்டார். இந்த பழக்கம் அவரின் குடியால் வந்தது இல்லை.
மாறாக விஜயகாந்தை சொல்லும் முன்னர் தான் எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த வடிவேலு ரசிகர்கள், “ ஆண்மகனாக பிறந்த அனைவரும் குடிக்காரர்கள் தான் ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.