ரவிமோகன் பிறந்த நாளில் கெனிஷாவின் பதிவு
நடிகர் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாடகி கெனிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்துள்ளார்.
விவாகரத்து சர்ச்சை
ரவி நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.
ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள். தற்போது அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கெனிஷா வாழ்த்து
ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.
மேலும் அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார். குறித்த விடயம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரவி மோகன் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கெனிஷா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.
அதில் கெனிஷா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆர்.எம். 'நீ' யாக இருப்பதற்கு நன்றி, தொந்தரவு செய்யாமல், ஒவ்வொரு மனிதனுக்கும் மனிதனுக்கும் அன்பையும் மரியாதையையும் வழங்குவதில் உறுதியாக இருப்பதற்கு நன்றி, வளர வலியைப் பயன்படுத்தி நித்தியமாக கவனம் செலுத்துவதற்கு நன்றி. கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |